Monday, June 5, 2017


How can black women dress up for a wedding?



கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?  அவரவர் நிறத்திற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்தால் எல்லாருமே தேவதைகள்தான். குறிப்பாக கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சருமம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சந்தேகமில்லை. வெயிலின் பாதிப்பு இருக்காது. அதனால் இளமையாகவும் சருமம் சுருக்கமின்றியும் இருக்கும். இது கருப்பாக இருப்பவர்களுக்கு கிடைத்த பரிசு என சொல்லலாம்.  நைஜீரிய பெண்களின் சருமம் இயற்கையில் வசீகரமானது. அதனாலேயே பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அவர்கள் தங்களை எப்படி திருமணத்தின்போது மிக அழகாய் ஜொலிப்பார்கள். அவர்கள் எப்படி அழகுபடுத்திக் கொள்கிறார்கள் எனத் தெரிந்தால் நமக்கும் அது உபயோகமாக இருக்கும். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தேவையானவை : ஃபவுண்டேஷன் ஃபேஸ் பவுடர் அட்ர்த்தியான பிரஷ் பிங்க் லிப் க்ளாஸ் பிங்க் லிப்ஸ்டிக் சிவப்பு உதட்டு லைனர் ஐ லைனர் அழியாத கண்மை மெல்லிய பிரஷ் செய்முறை :1 முதலில் ப்ரைமர் கொண்டு முகத்திற்கு ஒரே நிறம் தந்திட வேண்டும். அதனால் திட்டு திட்டாக முகத்தில் உருவாவதை தடுக்க முடியும். ஸ்டெப் -2 கருப்பாக இருப்பவர்களுக்கு மஞ்சள் ஃபவுண்டேஷன் மிகவும் எடுப்பாக இருக்கும். ஆகவே அதனை வாங்கிக் கொண்டு முகம் முழுவதும் புள்ளிகளாக வைத்து மெதுவாக மேல்னோக்கி தடவுங்கள். மறக்காமல் கழுத்திற்கும் தடவுங்கள். கண்கள் மேக்கப் செய்வதை முதலில் கண்களுக்குதான் தர வேண்டும். அதன் பின்தான் முகத்திற்கு செய்ய வேண்டும். ஆகவே கண்களில் கருவளையம் இருந்தால் கண் மேக்கப் எடுபடாது. எனவே கான்சீலர் கொண்டு கண்களுக்கு அடியில் முக்கோணம் மாதிரி தடவுங்கள். ஐ ஷாடோ பின்னர் ஐ ஷாடோவை கண்களில் நீங்கள் விரும்பும்படி லைட் நிறத்தில் கொடுத்து அதன் மேல் அடர்த்தியான ஊதா அல்லது பிங்க் நிறம் கொடுத்தால் எடுப்பாக இருக்கும். எளிதாக கண் மேக்கப்பிற்கு கண்களின் ஓரத்திலிருந்து புருவத்தின் நுனி வரை ஒரு செலோடேப்பை நீள வாக்கில் ஒட்டி அதன் பி ஐ ஷேடோ போட்டால் கச்சிதமாக அமையும். அதன் பின் செல்லோ டேப்பை உருவி விடுங்கள். முகம் இப்போது முகத்திற்கு வாருங்கள். இப்போது ஃபேஸ் பவுடரைக் கொண்டு முகத்தில் பூசுங்கல். லேசாக பிரஷ் பட்டால் போதுமானது. அதுவே மிகைப்படுத்தாத மேக்கப்பை காண்பிக்கும். உதடு : உதட்டிற்கு அடர்த்தியான சிவப்பு நிற லைனரை உபயோகியுங்கள். அதன் பின் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை பூசவும். இது உங்களை அழகாக காண்பிக்கும். இந்த அடர்த்தியான நிறம் பிடிக்க வில்லையென்ரால் லைட் கலர் லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment