Monday, June 5, 2017

கல்யாண பெண்களுக்கான சில மழைக்கால அழகுக் குறிப்புகள்!!




மழைக் காலத்தில் மேக்கப் செய்து கொள்வது அவ்வளவாக சரிப்பட்டு வராது. அதிலும் இந்த மழைக் காலத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீங்கள் ஒரு மணப் பெண்ணாக மழைக் காலத்தில் உங்களை அலங்கரித்துக் கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள இதோ சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேக்கப்பிற்கு முன்... உங்கள் திருமண நாளுக்கு முன்பாகவே உங்கள் சருமம் ஒரு நல்ல மேக்கப்பிற்குப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, உங்கள் முகத்தில் உள்ள கண்களின் அடிப்பகுதி, மூக்கு, கன்னம், கழுத்து ஆகியவற்றை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உதடுகள் உங்கள் உதடுகளுக்கு வண்ணம் பூசுவதற்கு, அதாவது லிப்ஸ்டிக் போடுவதற்கு அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மழைக் காலமாக இருப்பதால், லிப் கிளாஸிற்குப் பதில் லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. மாலை நேரங்களில் பிரைட் லிப் ஷேடுகளை உபயோகிக்க வேண்டும். கேண்டி பிங்க், பவளம், சிவப்பு ஆகிய ஷேடுகள் மாலை நேர மண விழா நிகழ்ச்சிகளுக்கு நல்லது.

கண்கள் மழைக் காலத்திற்கு மேட் ஐ-ஷேடோக்கள் தான் பெஸ்ட். பகல் நேரங்களில் பேஸ்டல் டோண்ட் ஐ-ஷேடோக்கள் சூப்பராக இருக்கும். மாலை வேளைகளில் பழுப்பு, சாம்பல், கருப்பு, ப்ரான்ஸ் உள்ளிட்ட மேட் ஐஷேடோக்கள் நன்றாக இருக்கும். மழைக் காலமாதலால், தண்ணீர் புகாத மஸ்காரா போட்டுக் கொள்ளலாம்.

கண்டிப்பாகத் தேவை உங்கள் முகத்தின் மையப் பகுதி, புருவங்கள் மற்றும் தாடைகள் ஆகிய பகுதிகளைப் பளபளப்பாக வைத்திருக்க மேட்டுகளால் ஆனவற்றைப் பயன்படுத்த வேண்டும். காண்ட்டூர் மற்றும் ஹைலைட்ஸ் ஆகியவை உங்கள் முக அழகை சமமாக வைத்திருக்க உதவும்.

ஓவர் மேக்கப் வேணாம் முடிந்த வரை இயற்கையான முக அழகைப் பராமரிக்க வேண்டும். மிகவும் ஓவராக மேக்கப் செய்து கொள்ள வேண்டாம். உங்கள் சருமத்தை விட லைட்டான நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். சரியான நிறத்தை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதே போல், மேக்கப் என்ற பேரில் முகத்தில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமான நிறங்களை அள்ளித் தெளித்து விடாதீர்கள். ஆத்திர அவசரத்திற்கு... உங்கள் திருமணம் முடியும் வரை மேக்கப் கலையாது, கவலை வேண்டாம் என்று உங்களுக்கு மேக்கப் போட்டுவிட்ட பியூட்டிசியன் சொல்லி விட்டுத்தான் போவார். ஆனால் மழைக் காலத்தில் எப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கும். எனவே ஒரு மேக்கப் கிட்டை எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது, கண்களுக்கும் உதடுகளுக்கும் தேவையானவற்றை வைத்துக் கொள்ளவும்!

0 comments:

Post a Comment