Monday, June 5, 2017


Does ophthalmic cough stop you? Then read this
வாய் நாற்றம் உங்களை பேசவிடமால் தடுக்கிறதா? அப்ப இத படிங்க

வாய் துர்நாற்றத்தினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறீர்களா? நீங்கள் பேச வாயை திறந்தாலே அருகில் இருப்பவர்கள் மூக்கை மூடிக்கொள்கிறார்களா? இனி கவலை வேண்டாம் வாய் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பது பற்றி காண்போம்.

இலவங்கப்பட்டை


இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் இட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நீரை வாய்கொப்பளிக்க பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் நீங்கும். 
பார்ஸ்லி இலைகள்



பார்ஸ்லி இலைகள் பார்ஸ்லி இலைகள் வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலன்களை தரும். இவற்றை வாயில் இட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.

ஏலக்காய் விதைகள்


ஏலக்காய் விதைகள் ஏலக்காய் விதைகளை மெல்லுவதன் மூலம் உங்களுக்கு இனிமையான சுவாசம் கிடைப்பது உறுதி. கிராம்பு கிராம்பு வாய் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்றது. கிரம்பை மென்று வாயில் வெற்றிலையை போல அடக்கிக்கொண்டால் வாய் துர்நாற்றம் போகும். சில நறுமண பொருட்களையும் மெல்லலாம். எலுமிச்சை நீரில் எலுமிச்சை சாறும் உப்பு சேர்த்து இந்த கலவையால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் போகும். கொத்தமல்லி கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் ஆகும். இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும். மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று சாப்பிடுவதால் வாய்துர்நாற்றம் நீங்கும். ஆனால் சாப்பிட்ட உடன் வாய்கொப்பளித்து விடுங்கள். இல்லையென்றால் உணவு துணுக்குகள் பற்களில் சிக்கிக்கொள்ளும். தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள். தினமும் இரண்டு முறை பல்துலக்குங்கள். இரவு வேலை இரவு வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் சாப்பிடமால் இருப்பவர்களுக்கும் வாய்துர்நாற்றம் உண்டாகும். அவர்கள் இந்த முறைகளின் மூலம் சிறந்த பலனை அடையலாம்.

0 comments:

Post a Comment